உதா கம்மான வீடமைப்புத் திட்டம் முல்லைத்தீவில் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது

உதா கம்மான வீடமைப்புத் திட்டம் முல்லைத்தீவில் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பகுதியில் பண்டாரவன்னியன் மாதிரிக் கிராமத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

132 ஆவது உதா கம்மான வீடமைப்புத் திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்

இதன் பின்னர், 133 ஆவது உதா கம்மான வீடமைப்புத் திட்டத்தின் மூலம் கயிலாய வன்னியன் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 350 மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், 300 பேருக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது.

Sharing is caring!