உத்தேச குற்றப்பிரேரணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது

ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேரணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொறுப்புள்ள ஓர் அரசியல் இயக்கம் என்ற முறையில், இன்று நாடு எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியைக் குறைப்பதைத் தவிர, கூட்டுவதற்கு நாம் ஒருபோதும் உடன்படமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பரபரப்பான சூழ்நிலையை மேலும் அதிகரிக்க தமிழர் முற்போக்கு கூட்டணி விரும்பவில்லை என்றும் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தமிழர் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்துத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!