உயர்தர விடைத்தாள் மதிப்பீடு பூர்த்தி

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் இரண்டாவது கட்டத்தின் மதிப்பீட்டுநடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக முழுமையாக மூடப்பட்டிருந்த 4 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க கொழும்பு ஆனந்த கல்லூரி, குருலுகொமி மகா வித்தியாலயம், காலி சுதர்மா கல்லூரி மற்றும் மாத்தறை புனித சவேரியார் கல்லூரி என்பனவற்றின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் இரண்டாவது கட்டத்தின் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக 37 பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டதுடன் அதில் 4 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!