உரங்களை பரிசோதிக்க விவசாய அமைச்சர் உத்தரவு
இறக்குமதி செய்யப்படும் உரங்களின் தரப் பரிசோதனைகளை இறக்குமதிக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் பி.ஹரிசன் பணிப்புரை விடுத்துள்ளார்.
வட மத்திய மாகாணத்தில் இரசாயன உரப் பயன்பாட்டினால் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரித்தமைக்கு, தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்டமையே காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தரமான உரம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச உர கூட்டுத்தாபனத்தின் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S