உரிமம் வழங்கப்பட்டுள்ள காணிகளை அளவிடும் பணிகளை மீண்டும் முன்னெடுக்க தீர்மானம்

அனுமதிப்பத்திரம் மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ள காணிகளை அளவிடும் பணிகளை மீண்டும் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணி அளவீட்டின் பின்னர் குறித்த காணிகளிற்கான சலுகைப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் பி.எம்.பி. உதயகாந்த தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாடு முழுவதும் 11 இலட்சம் ஏக்கர் வரையிலான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!