உருக்குலைந்த நிலையிலான சடலம்
மொரட்டுவை – எகொட உயன பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையிலான சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் கறுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S