உற்பத்திகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்த உதவி

இலங்கையின் உற்பத்திகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கான உதவிகளை, விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் வழங்கவுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையின் விவசாய அபிவிருத்திக்காக 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறித்த நிதியம் வழங்கவுள்ளது.

1978 ஆண்டிலிருந்து, இலங்கையின் விவசாய அபிவிருத்திக்காக விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம், 2,298 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!