உலகில் முதற்தடவையாக இரண்டு பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டமைத்து நிருவாகம்
உலகில் முதற்தடவையாக ஒரு நாட்டிலுள்ள இரண்டு பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டமைத்து நாட்டை நிருவகித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் வைத்து வெளிநாட்டு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
கூட்டணியாகவுள்ள பிரதான கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முறுகல் நிலை இருப்பதாக ஊடகங்களில் வௌியாகின்ற கருத்து குறித்த பிரதமரிடம் கேட்கப்பட்ட போது, அவ்வாறான விரோதப் போக்குகள் எதுவும் இல்லை என்றும் பிரதமர் பதிலளித்துள்ளார்.
வியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், சர்வதேச ஊடகமொன்று மேற்கொண்ட நேர்காணல் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S