உலகில் முதல்முறையாக சிங்கப்பூரில் நடந்த ஒன்லைன் விசாரணை..!!

உலகில் முதல்முறையாக சிங்கப்பூரில் ஒருவருக்கு ஒன்லைன் விசாரணை மூலம் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூரில் நீதிமன்றங்கள் காணொளியில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஒன்லைனில் நடந்த விசாரணையில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியாவை சேர்ந்த புனிதன் கணேசன் என்பவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “விசாரணையில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பு கருதி வழக்கு வீடியோ கொன்பரன்சிங் முறையில் நடந்தது. வீடியோ கொன்பரன்சிங் முறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை” எனத் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!