உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..!

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பிரதான வீதியில் உள்ள நினைவாலயத்தில் இன்று காலை நினைவுகூரப்பட்டிருக்கின்றது.

தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத் தூபியில் இந்த நினைவுகூரல் இடம்பெற்றிருக்கின்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேருக்குமாக பொது சடர் ஏற்றப்பட்டு நினைவு தூபிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட

அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Sharing is caring!