உள்நாட்டுத் தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளது

உள்நாட்டுத் தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யகந்தலாவ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வருடத்தில் 294 கோடி தேங்காய் அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளி இடங்களில் ஒரு தேங்காயின் விலை 50 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் தேங்காயின் சில்லறை விலை மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில், ஒரு தேங்காயின் மொத்த விலையை 45 ரூபா வரை குறைத்து பேணுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!