உள்நாட்டு தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளது

உள்நாட்டு தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெங்கு செய்கை சபையின் தலைவர் கபில யகந்தலாவ தெரிவித்தார்.

இந்த வருடம் 294 கோடி தேங்காய் அறுவடையை எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தேங்காய் எண்ணெய்க்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

கேள்விக்கு ஏற்ற வகையில் தேங்காய் எண்ணெய் விநியோகம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெங்கு செய்கை சபை அறிவித்துள்ளது.

Sharing is caring!