உள்ளுராட்சி மன்ற உறுப்பினரகள் 28 ஆல் அதிகரிப்பு

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு அர­சி­த­ழில் பிர­சு­ரிக்­கப்­பட்ட ஆச­னங்­க­ளுக்கு மேல­தி­க­மாக வேட்­பா­ளர்­கள் வெற்­றி­பெற்­றுள்­ள­தாக தேர்­தல்­கள் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. இத­னால் பல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் திடீர் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

‘உறுப்­பி­னர் எண்­ணிக்கை அதி­க­ரிப்பை தீர்­மா­னிப்­ப­தற்­கான அதி­கா­ரம் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு உள்­ளது. அதற்கு அமை­வா­கவே இந்த அதி­க­ரிப்பு முன்­னெ­டுக்­கப்­பட்­டது’ என்று தேர்­தல்­கள் திணைக்­கள வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

கலப்­பு­மு­றை­யில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் நடை­பெற்­றது. வட்­டா­ரம் மற்­றும் விகி­தா­சார அடிப்­ப­டை­யில் கட்­சி­க­ளுக்கு ஆச­னங்­கள் கிடைக்­கப் பெற்­றது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் கட்­சி­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்ற வாக்­கு­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆச­னங்­கள் கணிக்­கப்­ப­டும்­போது, கட்­சி­கள் மேல் மிகை­யான தொகை­யில் வட்­டா­ரங்­க­ளைக் கைப்­பற்­றி­யி­ருந்­தால், அந்­தச் சபைக்கு அர­சி­த­ழில் ஏற்­க­னவே பிர­சு­ரிக்­கப்­பட்­ட­தற்கு மேல­தி­க­மாக ஆச­னங்­களை வழங்­க­வேண்­டிய நிலை ஏற்­ப­டும்.

தவறவிடாதீர்கள்!

இத­னால் வடக்­கில், மன்­னார் நகர சபை, காரை நகர் பிர­தேச சபை, வவு­னியா வெங்­க­லச்­செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தலா ஓர் ஆச­ன­மும், மாந்தை மேற்கு பிர­தேச சபை, வவு­னியா தெற்கு தமிழ்ப் பிரதே சபை, வலி. வடக்­குப் பிரதே சபை ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தலா 4 ஆச­னங்­க­ளும், வவு­னியா வடக்கு பிரதே சபை மற்­றும் கரை­து­றைப்­பற்று பிர­தேச சபை ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தலா 3 ஆச­னங்­க­ளும், வல்­வெட்­டித்­துறை நகர சபை, புதுக்­கு­டி­யி­ருப்பு நகர சபை ஆகி­ய­வற்­றில் தலா 2 ஆச­னங்­க­ளும் அதி­க­ரிப்­புச் செய்­யப்­பட்­டுள்­ளது.

Sharing is caring!