உள் வீடொன்றிற்குள் புகுந்த முதலை – வீடியோ

வவுனியா – பூந்தோட்டம் கல்லூரி வீதியில் உள் வீடொன்றிற்குள் புகுந்த முதலை பிரதேசவாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வீதியிலுள்ள வீட்டின் வாசலில் காணப்பட்ட நடமாடிய நிலையில் முதலை தொடர்பில் வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உரிமையாளர் முதலையைப் பிடித்து மரம் ஒன்றில் கயிற்றினால் கட்டி வைத்துள்ளார்.

சுமார் 6 அடி நீளமான முதலையே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட முதலை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகளில் நீர் வற்றியுள்ள நிலையில் முதலைகள் மக்கள் குடியிருப்பிற்குள் நுழைவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலை

வவுனியாவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலை

Posted by Newsfirst.lk tamil on Tuesday, September 25, 2018

Sharing is caring!