உழுந்து, நெல் உற்பத்தி நடவடிக்கை

வவுனியா மாவட்டத்தில் 2018 பெரும்போகத்தில் 16,000 ஏக்கரில் உழுந்து மற்றும் 550 ஏக்கரில் பாரம்பரிய நெல்லும் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 16,000 ஏக்கரில் உழுந்து உற்பத்திக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான வைபவம் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் கைவிடப்பட்ட 550 நெற்காணியில் பழைமை வாய்ந்ததும் போசாக்கு நிறைந்ததுமான நெல் வகைகளை உற்பத்தி செய்வதற்கு விவசாய அமைச்சு விவசாய அபிவிருத்தித் திணைக்களம், விவசாயத் திணைக்களம் ஆகியன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

Sharing is caring!