ஊடக செயலாளர் கைது…மங்கள மறுப்பு

துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் தனது ஊடக செயலாளரும் உள்ளதாகக் கூறப்படுவது அடிப்படையற்றது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (07) நடைபெற்ற சில ஊடக சந்திப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் சிலர் தனது பெயரைக் குறிப்பிட்டு, தனது ஊடக செயலாளருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகக் கருத்து வெளியிட்டதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மாகந்துரே மதுஷ் என்ற நபருடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் தொடர்பிலும் நாட்டில் இருந்து அனுப்புவதற்காக அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sharing is caring!