ஊரெழுவில் வீட்டில் புகுந்து தாக்குதல்

யாழ்ப்பாணம் – கோப்பாய், ஊரேழு அம்மன் கோவிலடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் அடையாளந்தெரியாதோர் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, வீட்டிலிருந்த 77 வயதான ஆண் ஒருவரும் 70 வயதான அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் சில கொள்ளையிடப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

Sharing is caring!