ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தில் 10 லட்சம் நகைகள் திருட்டு

முல்லைத்தீவு- ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த திருடர்க ள் அங்கிருந்த பல லட்சம் பெறுமதியான நகைகளை களவாடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஆலயத்தின் வாசல் கதவினை உடைத்து மூலஸ்தானத்தில் பிள்ளையாருக்குச் சாத்தப்பட்டிருந்த வெள்ளி கவசம் மற்றும் அதன் வெள்ளி குடை, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். களவாடப்பட்ட நகைகளின் பெறுமதி 10 லட்சத்திற்கும் மேற்பட்டதென ஆலய நிர்வாகம் கூறியுள்ளது.

Sharing is caring!