ஊவா மாகாணம் என்பவற்றுக்கான சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை ஆரம்பம்

வட மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் என்பவற்றுக்கான சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இருபத்தாறு மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய உதவியினால் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் 55 அம்பியுலன்ஸ் வண்டிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய நிகழ்வில் வடமாகாணத்திற்கு 21 அம்புலன்ஸ் வண்டிகளும், ஊவா மாகாணத்திற்கு 34 வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த சேவையின் கீழ் பணியாற்றும் சாரதிகள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்கள் ஆகியோருக்கான நியமனப்பத்திரங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங், வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Sharing is caring!