எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணி கொழும்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணி கொழும்பு – நகர மண்டபத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

”மக்கள் பலம் கொழும்பிற்கு” எனும் தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமலும் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு இடையூறு ஏற்படுத்தாமலும் பேரணியை முன்னெடுக்குமாறு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியின் போது, மக்களுக்கு இடையூறு ஏற்படுமாயின் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அரச சொத்துக்களை சேதப்படுத்தும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!