எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொழும்புக்கு வருகை – அடுத்த கட்ட திட்டமிடல்

கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள்   கொழும்புக்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கும் கருத்தின்படி நாம் அடுத்த கட்ட திட்டமிடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்துக்கு  வருகை தந்துள்ள ஒவ்வொருவரும் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இந்த நாட்டை சிறந்த முறையில் நிருவகிக்கவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதால உலக குழுவினரை இல்லாதொழிக்கவும், ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பவும் மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடியும் என்பதையே இந்த மக்கள் வெள்ளம் தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்னும் பெரும் தொகையிலான மக்கள் இன்னும் கொழும்புக்கு வருகை தந்தவண்ணமுள்ளதாகவும் இது தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!