எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி பிரதான தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு, கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அஞ்சல் பணியார்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 14வது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டத்தை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைத்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார இதனைத் தெரிவித்தார்.

Sharing is caring!