எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாட்டாளி வர்க்கத்திலிருந்து ஒருவரை வேட்பாளராக்க நடவெடிக்கை

மக்கள் விடுதலை முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அரசாங்கம் போதியளவு தலையீடு செய்யவில்லையாயின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாட்டாளி வர்க்கத்திலிருந்து ஒருவரை வேட்பாளராக்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்பீட உறுப்பினர் கே.டீ. லால்காந்த தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

1978 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயகத்துக்கு எதிராக காணப்படும் பிரதான தடை இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையாகும் எனவும் அவர்  குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் மக்களினால் தோல்வியடையச் செய்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இந்த அரசாங்கம் மீண்டும் கொண்டுவர முயற்சி எடுப்பதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

Sharing is caring!