எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ஷிரந்தி ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளராக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை களமிறக்குவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜபக்ஷ குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் இந்திய விஜயத்தில் ஈடுபட்டுள்ள எதிர்கட்சி தலைவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சியம் என குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்சவின் அந்த கருத்தின் பின்னர் தூதரக அதிகாரிகள் பலர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என நாமல் ராஜபக்சவிடம் வினவியுள்ளனர்.

இதன் போது தனது தாயார் ஷிரந்தி ராஜபக்சவுக்கே ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

Sharing is caring!