புதிய முன்னணி உருவாக்கம்..?கூட்டு எதிர்க் கட்சிகள் சந்திப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு புதிய முன்னணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இன்று கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி. தலைமையில் இன்று (18) இரவு 7.00 மணிக்கு நெலும் மாவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

புதிய முன்னணியொன்றை உருவாக்க வேண்டும் என்ற பிரேரணை தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது. கூட்டு எதிர்க் கட்சியின் கடந்த கூட்டத்தில் இந்தப் பிரேரணை வாசுதேச நாணயக்கார எம்.பி.யினால் முன்வைக்கப்பட்டது.

ஏகாபத்த பொதுஜன பெரமுன என பெயரிடப்பட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அதன் சின்னம் மலர் மொட்டு எனவும் கடந்த கூட்டத்தில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Sharing is caring!