எந்தவொரு இந்தியப் புலனாய்வுப் பிரிவும் தம்மை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை

எந்தவொரு இந்தியப் புலனாய்வுப் பிரிவும் தம்மை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்களில் வௌியான தகவல்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!