எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்பட வில்லை

தன் மீதான எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்பட வில்லையெனவும் அரசாங்கம் இன்னும் அதற்கான ஆதாரங்களைத் தேடி வருவதாகவும் எந்தவொரு குற்றச்சாட்டையும் சாட்சியங்களோடு நிரூபித்தால் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ளத் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிவ்யோக் டைம்ஸ் பத்திரிகையில் தனக்கு எதிராக கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவையே. இதுவும் ஏற்கனவே இந்த அரசாங்கம் கூறியது போன்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும்.

எனது கழுத்தை அறுத்துக் கொள்வது இந்த பொய்யான குற்றச்சாட்டுக்களுடன் ஒப்பிடும் போது இலகுவான காரியமாகவே கருதுகின்றேன். அரச தலைவர்கள் மீது இவ்வாறு தான் பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர். எந்தவொரு சர்வதேச நிறுவனமும் எமக்கு நிதி உதவி செய்யவில்லை.

அரசாங்கத்திலுள்ள பிரச்சினைகளை மறைத்துக் கொள்வதற்கே இவ்வாறான பொய்களை சோடிக்கின்றனர். மத்திய வங்கி பிணை முறி மோசடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றை மூடி மறைப்பதற்கே அரசாங்கம் இவ்வாறான வதந்திகளைப் பரப்புவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாவத்தகம பிரதேசத்தில் நேற்று ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

Sharing is caring!