எனது மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் – மஹிந்த ராஜபக்ஷ

முகம்மது நபியின் பிறந்த நாளை அனுஷ்டிக்கும் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மீலாத் தின செய்தியில் கூறியுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் இந்த தினத்தை மத அனுஷ்டானங்கள், ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் முகம்மது நபியின் போதனைகளுடன் அனுஷ்டிக்கின்றனர். உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகள் எப்போதுமே நிபந்தனையின்றி சர்வதேச களத்தில் இலங்கைக்கு ஆதரவு வழங்கி வந்துள்ளன.

அந்த அளப்பரிய ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த புனித தினத்தில் மேற்கூறிய நாடுகளின் இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!