என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தினூடாக கடன்

வவுனியா மாவட்டத்தில் நுண் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தினூடாக கடன் வழங்கப்பட்டு வருகின்றது.

நுண் கடன்களால் பாதிக்கப்பட்ட பலர் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தினூடாக கடன்களைப் பெற்று, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதனிடையே, குடிசைக் கைத்தொழில் உள்ளிட்ட தொழிற்துறைகளில் ஈடுபடுபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன் தரக்கூடிய உதவித் திட்டங்களும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடனாளிகளுக்கு இதன் மூலம் தீர்வு கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, அரச சார்பற்ற சில நிறுவனங்களும் தமது செயலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதியைப் பெற்று கடன் சேவையை வழங்கி வருவதாகவும் கூறினார்.

Sharing is caring!