”எமது தேயிலை” புதிய நாமம்

இலங்கையின் புதிய தேயிலை நாமமான ”எமது தேயிலை” (அபே தே) இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 106 வருட தேயிலை விநியோக செயற்பாட்டின் புதிய தேயிலை நாமம் இரத்மலானை ஸ்டெய்ன் கலையரங்கில் இன்று வெளியிடப்பட்டது.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் ஜோன்ஸ் டீ (Jones Tea) இலங்கை தேயிலை ஏற்றுமதித்துறையில் விசேட அடையாளத்தை பதிவு செய்த நாமமாகும்.

A.F. Jones Tea என்ற பெயரில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்காவிற்கு 107 வருடங்களாக ஏற்றுமதி செய்யப்படும் இந்த விசேட தேயிலை ”எமது தேயிலை” என்ற பெயரில் உயர் தரத்துடன் உள்நாட்டு சந்தைக்கு இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் ”எமது தேயிலை”-ஐ உள்நாட்டில் விநியோகிக்கும் ICL உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

Sharing is caring!