எம்.கே.சிவாஜிலிங்கம் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்றார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்றார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டார்.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிறந்த நாளை கொண்டாட முயன்றார் என குற்றம் சாட்டி வல்வெட்டித்துறை காவல்துறையினரால் , இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அதன் போது அவர் வசம் இருந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் , அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து , மேலதிக நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல்களை பின்னர் வழங்குவதாக கூறி சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வுகளை வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீடு அமைந்திருந்த காணியில் ஏற்பாடு செய்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஏழு பேரை வல்வெட்டித்துறை காவல்துறையினர்கைது செய்துள்ளனர்.

Sharing is caring!