எம்.ஜி.ஆரின் நினைவுதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தென்னிந்தியக் கலைஞர்கள் கண்டியில்

கண்டியில் நாளை (16) நடைபெறவுள்ள எம்.ஜி.ஆரின் நினைவுதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தென்னிந்தியக் கலைஞர்கள் சிலர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

கண்டி – பொல்கொல்ல கூட்டுறவு சங்க மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ள எம்.ஜி.ஆரின் இரண்டாம் நுற்றாண்டு ஆரம்ப விழா நிகழ்வுகளில் தென்னிந்திய கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள நடிகரும் இயக்குநருமான கே.பாக்கியராஜ், நடிகர் பாண்டியராஜ், நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, தேனிசைத் தென்றல் தேவா, குணச்சித்ர நடிகர் சரவணன் உள்ளிட்டோர் இன்று நாட்டிற்கு வருகை தந்தனர்.

Sharing is caring!