எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் – ஒத்திவைப்பு விவாதம் 20 ஆம் திகதி

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் அன்றைய தினம் பிற்பகல் 12.30 முதல் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளது.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் நிறைவேற்றுக் குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இதற்கான பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 18ஆம் மற்றும் 19ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!