எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகித்ததன் மூலம் இந்தக் கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியம் 77 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியது.
இது அதற்கு முந்திய வருடத்துடன் ஒப்பிடும்போது 113 வளர்ச்சியாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S