எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நேரடியாக விவாதம்

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நேரடியாக விவாதம் ஒன்றுக்கு வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

தங்களது காலத்தை மறந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்து வருகின்றார். மஹிந்த ராஜபக்ஷவின் இறுதிக் கால கட்டத்தில் காணப்பட்ட எரிபொருள் விலை, நல்லாட்சி அரசாங்கத்தினால் தற்பொழுது இறுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை விடவும் அதிகமாகும் எனவும் அமைச்சர் மங்கள குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் கடந்த சில மாதங்களுக்குள் இரு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை விடுத்திருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Sharing is caring!