எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் விநியோகிக்கப்படும் எரிபொருள் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வகையில் 92 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும் 94 ஒக்டேன் ரக பெற்றோல் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சாதாரண பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 145 ரூபாவாகவும், சிறப்பு பெற்றோல் ஒரு லீ்ட்டரின் விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கின்றது.

சாதாரண டீசல் ஒரு லீட்டர் 9 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 118 ரூபாவாகும்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் அதிகரிப்பைத் தொடர்ந்து போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன.

கடந்த மே 11 ஆம் திகதி கடைசியாக எரிபொள் விலை அதிகரிக்கப்பட்டது.

இதேவைள, கடந்த 05 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட விலையேற்றத்தை அரசாங்கம் மீண்டும் வாபஸ் பெற்றுக் கொண்டது. இதே விலை அதிகரிப்பையே மீண்டும் இன்று நள்ளிரவு முதல் அமைச்சரவையில் நிறைவேற்றவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!