எரிபொருள் விலை உயர்விற்கு நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு

எரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் சுஜித் சமந்த இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இன்றைய கால எரிபொருள் விலை உயர்வால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் 44% ஆக இருந்த ஆழ்கடல் மீன்பிடி வருமானம் இன்று பூச்சியத்தைத் தொட்டுள்ளது.

இது தொடர்பில் ஆட்சியாளர்களை சந்தித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சிறு சிறு போராட்டங்களை மேற்கொண்டும் எந்த பலனுமற்றுப் போனது.

மீன்பிடித்துறை அமைச்சரோ நிதி அமைச்சர் பக்கம் விரலை நீட்டுகிறார்.

இதில் இன்னும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் 02 மாத காலமாக மீன்பிடித்துறை அமைச்சர் மக்கள் சந்திப்பை மேற்கொள்ளவில்லை. இப்படியிருந்தால் எவ்வாறு எம் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பது.

இத்தகைய அசமந்தப்போக்கை தடுத்து, எம் மீனவர்களின் நலனிற்காக வெகு விரைவிலேயே ஒரே நாளில் நாடுபூராக ஆர்பாட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்“ என எச்சரித்துள்ளார்.

Sharing is caring!