எல்.எம்.ஜீ. துப்பாக்கிகளை பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தகவல்கள்

மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பில் அன்று பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் இருந்த எல்.எம்.ஜீ. துப்பாக்கிகளை பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை தகவல்கள் மூலம் வெளியாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அன்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் கெப் ரக வாகனங்கள் அனைத்து மூலை முடுக்குகளிலெல்லாம் பயணித்தன. இந்த வாகனத்தில் எல்.எம்.ஜீ. ரக துப்பாக்கிகள் தான் இருந்துள்ளன. பிரச்சினைகள் ஏதாவது அன்று வந்திருந்தால், இந்த துப்பாக்கிகளைத் தான் அவர்கள் பயன்படுத்தியிருப்பர். இதன்போது, ஆயிரக் கணக்கில் மக்கள் மரணிக்க நேர்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் யார் பொறுப்புச் சொல்வது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

Sharing is caring!