எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் வழக்கை விசாரிக்க தடை

சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரா கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கை விசாரிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மீள்பரிசீலனை மனுவின் விசாரணைகள் நிறைவு பெறும் வரையில் இந்த தடையுத்தரவு அமுலாகும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய வழக்கின் போது இரண்டு தரப்பு வாதங்களையும் கவனத்திற் கொண்ட நீதிமன்றம், இந்த தடை உத்தரவை பிறப்பித்ததுடன், இது தொடர்பில் எதிர்ப்பு இருப்பின் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி தாக்கல் செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டது.

அத்துடன் இந்த மனுவை மீண்டும் செப்டம்பர் மாதம் 28ம் திகதிக்கு விசாரணை செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!