ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவு­வார்­கள், அது நடை­ பெ­றாது – இரா.சம்­பந்­தன்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவு­வார்­கள் என்று நான் நினைக்­க­வில்லை. அது நடை­ பெ­றாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வின் புதிய தலை­மை­முறை தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

வியா­ழேந்­தி­ரன் கட்சி தாவி­யமை தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, அவ­ரைப் பற்றி எமக்கு சந்­தே­கம் இருந்­தது. எமது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒரு கட்­சி­யால் அவர் நிய­மிக்­கப்­பட்­ட­வர். அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ருக்கு சில வாரங்­க­ளாக கூறிக்­கொண்டு வரு­கின்­றேன்.

வியா­ழேந்­தி­ர­னின் பேச்­சு­க­ளும் நடத்­தை­க­ளும் எனக்­குப் பிடிக்­க­வில்லை. இவ­ரைப் பற்றி நான் சந்­தே­கப்­ப­டு­கின்­றேன். திருத்­த­வேண்­டும் என்­றேன். அவர் வெளி­நாடு போயி­ருந்­தார். அவர் நாடு திரும்­பிய பின்­னர் கட்­சித் தலை­வர் தொடர்­பு­கொள்ள முயன்­ற­போ­தும் அலை­பேசி அழைப்­புக்கு பதி­ல­ளிக்­க­வில்லை. திடீ­ரென மாறி­யி­ருக்­கின்­றார். அது எங்­க­ளுக்கு அதிர்ச்­சி­யான விட­யம் அல்ல. அந்த விட­யம் தொடர்­பாக நாங்­கள் தக்க நட­வ­டிக்கை எடுப்­போம் – என்­றார்.

தற்­போ­தைய சூழ­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாட­கம் ஆடு­கின்­றது என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­தமை தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, அவர் ஒவ்­வொரு கரு­மத்­தை­யும் அர­சி­ய­லுக்­கா­கப் பயன்­ப­டுத்­து­ப­வர். மக்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­த­வில்லை. தனது சொந்த அர­சி­யல் முன்­னேற்­றத்­துக்­காக பயன்­ப­டுத்­து­கி­றார். அவ­ரது கருத்­துக்­க­ளுக்கு பதில் சொல்­வது முறை­யா­னது அல்ல – என்­றார்.

Sharing is caring!