ஏறாவூர் நகரசபை உறுப்பினர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ் ரியால் (ஐக்கிய தேசிய கட்சி) ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது இன்று பிணையில் விடுவிக்கபட்படடுள்ளார்.

கடந்த 12.10.2020 அன்று ஏறாவூர் நகர சபையின் வரவுசெலவுத்திட்ட அமர்வின் போது ஏற்பட்ட தாக்குதல் முயற்சியில் பாதிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபை பிரதி முதல்வர் எம்.எல்.ரெபுபாசம் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) செய்த முறைப்பாட்டிற்கமைய ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.ரியால் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது மாவட்ட பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் அவர்களினால் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நிதவான் உத்தரவிட்டுள்ளார்.

Sharing is caring!