ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் ஜனாதிபதியுடன் எந்தப் பேச்சுவார்த்தை கிடையாது

எஸ்.பீ. திஸாநாயக்க சொன்னால் அவரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் ஜனாதிபதியுடன் எந்தப் பேச்சுவார்த்தை கிடையாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகினால் அவருடன் பேச்சுவார்த்தை நடாத்த எந்த தடையும் இல்லை. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த எமக்கு உரிமையுள்ளது. நாம் கடந்த நாட்களில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!