ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைத் கூட்டத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைத் கூட்டத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) உரையாற்றவுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று ஆரம்பமாகிய ஐ.நா. சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில், இன்று பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் 4 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஈக்குவடோரைச் சேர்ந்த மரியா பெர்னாண்டா தலைமையில் ஆரம்பமாகிய, ஐ.நா. சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள 193 நாடுகளும் பங்கேற்றுள்ள இந்த மாநாடு 9 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

உலக அமைதியை நோக்காக்கொண்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்களும் இதன்போது நடத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற ஐ.நா. சபையின்பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையான பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.

நெல்சன் மண்டேலாவின் நூற்றாண்டு ஜனன தினத்தை முன்னிட்டு பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தலைவர்கள் பூகோள சமாதானம், மனித உரிமை மற்றும் யுத்தம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி வருவதுடன், நெல்சன் மண்டேலாவின் செயற்பாடுகள் உலக நல்லிணக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன​ நேற்று உரையாற்றும்போது குறிப்பிட்டுள்ளார்.

நெல்சன் மண்டேலா, இந்த உலகிற்கு அதிகாரங்களை மட்டுப்படுத்துதல் தொடர்பிலும், அதிகாரங்களை துறப்பது தொடர்பிலும் மனித நேயத்துடன் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர். இன்று இந்த உலகம் நெல்சன் மண்டேலா சென்ற பாதையில் செல்வதாக இல்லை.

அதனாலேயே, அந்த பயணத்த பற்றி உலகிற்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. இந்த உலகில் வாழும் இனங்கள் மத்தியிலும், அரச தலைவர்கள் மத்தியிலும் உலகிற்கு அரசியல் வழிகாட்டிகளாக உள்ள வழிகாட்டிகள் மத்தியிலும் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையின் குணாதிசியங்கள் எந்தளவுக்கு உள்ளது என்ற கேள்வி எழுகின்றது.

மனித நேயம் மிக்க தலைசிறந்த ஒரு பயணம் ஆகியவை தொடர்பில் இந்த உலகிற்கு எடுத்துரைத்த அவ்வாறான உன்னதமான தலைவர்களின் சுயசரிதங்களை இன்றைய உலகத்தலைவர்கள் கற்றிய வேண்டும் என்பது எனது கருத்தாகும் என தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

Sharing is caring!