ஐந்தாவது பகிரங்க அரச பங்காளித்துவ அமைப்பின் கூட்டத்தில் ஜனாதிபதி

ஐந்தாவது பகிரங்க அரச பங்காளித்துவ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார்.

ரோமில் நடைபெற்ற ஆறாவது உலக வன வாரத்தை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு மற்றும் வன பாதுகாப்பு சபையின் 24 ஆவது மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி இன்று (17) ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார்.

குடியுரிமை நிச்சயத்தன்மை, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் மக்கள் சேவை தொடர்பில் இந்தப் பகிரங்க அரச பங்காளித்துவ அமைப்பின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜோர்ஜிய ஜனாதிபதி ஜியோர்ஜி மார்க்வெலாஷ்விலிற்கும் (Giorgi Margvelashvili) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.

Sharing is caring!