ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­க­வும், வேண்­டப்­பட்ட விடு­த­லைக்­கா­க­வும் தம்மை விரித்­துக்­கொண்டு களம் புறப்­பட்­ட­வர்­கள் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள்

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம் இலங்­கை­யில் தமி­ழ­ரின் மர­பு­ரிமை உட்­பட்ட சுய­நிர்­ணய உரி­மைக்­காகப் போரா­டிய இயக்­கங்­க­ளில் தனித்­து­வ­மா­ன­தொரு பேரி­யக்கமாகும். புலி­கள் இயக்­கம் ஆரம்­பித்த காலம் தொடக்­க­ம், இன்­று­வரை இலங்கைத் தமி­ழர்­கள் உரிமை, அர­சி­யல், சக­வாழ்வு, சமூ­கம் என்ற சகல சந்­தர்ப்­பங்­க­ளி­லும் அவர்­க­ளது பெயர், பேச்­சுக்குப் பேச்­சும், வரிக்கு வரி­யும் உச்­ச­ரிக்­கப்­ப­டா­மல் இல்லை.

ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­க­வும், வேண்­டப்­பட்ட விடு­த­லைக்­கா­க­வும் தம்மை விரித்­துக்­கொண்டு களம் புறப்­பட்­ட­வர்­க­ ளா­கவே அவர்­கள் மக்­கள்­முன் தெரிந்­த­னர். கால ஓட்­டம், புலி­கள் பக்­கத்­தில் கருத்­தா­ழம்­மிக்க, ஒரு பற்­றற்ற மாறு­தலை உரு­வாக்கி முக­ம­றியா மனி­தர்­கள் ஆக்கி இருக்­கின்­றது.

சீரு­டை­யும், சீரிய நன்­ன­டத்­தை­யும் கொண்டு சமூ­கத்­துள் உல­வி­ய­வர்­கள், 2009ஆம் ஆண்டு இறு­திப் போருக்­குப் பின்­னர் சிறை, புனர்­வாழ்வு, சமூ­கத்­து­டன் இணைப்பு என்ற மூன்று சம்­பி­ர­தா­ய­மற்ற சடங்­கு­க­ளுக்கு முகம் கொடுத்து, தாம் உயிர் கொடுக்­கத் தயா­ராக இருந்த சமூ­கத்­துக்­குள் நிரா­யு­த­பா­ணி­க­ளாக வரும்­போது முற்­றி­லும் மாறு­பட்ட மனி­தர்­க­ளாக வாழ்­வி­யலை எதிர்­கொள்­கின்­ற­னர்.முத்­திரை குத்­தப்­பட்­ட­வர்­க­ளாக நிலை நிறுத்­தப்­பட்­டுள்ள முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள்

விரும்­பியோ, விரும்­பா­மலோ அவர்­கள் ஏற்­றுக்­கொண்ட பாத்­தி­ரத்­தி­லி­ருந்து விடு­பட முடி­யா­மல் முத்­திரை குத்­தப்­பட்ட மனி­தர்களாக நிலை­ நி­றுத்­தப்­பட்டுள்­ள­னர்.

பெரும்­பா­லான முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள் அங்­க­வீ­னர்­க­ளா­க­வும், போரில் தம் உட­லில் ஏற்­றுக்­கொண்ட விழுப்­புண் கார­ண­மாக, உடல் பல­மற்­ற­வர்­க­ளா­க­வும் நட­மா­டு­கின்­ற­னர். பெரும்­பா­லான முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள் சிறை வாசத்­தின்­பின் திடீ­ரென சாவடையும் உடல்­நி­லை­யி­லேயே காணப்­ப­டு­கின்­ற­னர். இது தொடர்­பான உள்­ளார்த்­தம் பொது­வா­ன­தா­கவே வைத்­துக்­கொள்­வோம். ஆனா­லும், சமூ­கம், வாழ்­வி­யல் என்ற கண்­ணோட்­டத்­தில் இவர்­க­ளது தளம், பொது­மக்­கள் வாழ்­வில் இருந்து சரி­வர இரண்­டா­கப் பிரிக்கப்­ப­டு­ கி­றது.

போருக்கு முன்­னர் மதிக்­கப்­பட்ட அவர்­கள் போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர் அடங்கி ஒடுங்கி வாழ­வேண்டிய நிர்ப்பந்­தத்­திற்­குள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். ஒரு­சி­லர் தமது வாழ்­வி­ய­லை­யும், வாழ்க்­கைப் போக்­கை­யும் மாற்­றிக் கொண்டு, வௌிநா­டு­க­ளில் தஞ்­ச­ம­டைந்து வாழ்­கின்­ற­னர். பெரும்­பா­லா­ன­வர்­கள் புனர்­வாழ்­வுக்­குப் பின்­னர் வௌிநா­டு­க­ளுக்கு தப்­பிச்­செல்ல முடி­யாத இக்­கட்­டான சூழ­லில், வாழ்க்­கையை நகர்த்­து­கின்­றமை முற்­றி­லும் உண்­மை­யான விட­யம்.

பேச்­சுச் சுதந்­தி­ரம் அற்­ற­வர்­க­ளா­கிப்
போன­தாக உண­ரும்
முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள்

சமூ­கத்­துக்­குள் கல­க­லப்­பாக, ஒரு அங்­க­மாக இருந்த புலி உறுப்­பி­னர்­கள், சுய­மான பேச்­சுச் சுதந்­தி­ரமோ, நியா­யம் நீதி­களை எடுத்­து­ரைக்­கும் சுதந்­தி­ரமோ அற்­ற­வர்­க­ளா­கிப் போனார்­கள்.

தாம் உண்டு, தம்­பாடு உண்டு என வாழ­வேண்­டிய நிர்ப்­பந்­தம் சூழல் கார­ணி­யாக அவர்­களை முடக்கி வைத்­தி­ருப்­பது, அவர்­க­ளது தனிப்­பட்ட வாழ்­வி­ய­லி­லும், மன­த­ள­வி­லும் கடு­மை­யான தாக்­கத்­தைச் செலுத்­து­வதை உண­ர­மு­டி­கின்­றது.

மக்­க­ளோடு மக்­க­ளாக தங்­களை நிலை ­நி­றுத்­திக்­கொள்ள முடி­யாத ஒரு விசித்­தி­ர­மான பிரிவு நிலையை அவர்­கள் சந்­திக்­கின்­றார்­கள். கால ஓட்­டத்­தில் மாற்­றம் கண்­டு­வ­ரும் அர­சி­யல், சமூக சூழ் நிலை­களே இதற்­கான கார­ணம் என உண­ர­மு­டி­கி­றது.

பெரும்­பா­லும் அங்­க­வீ­ன­முற்ற போரா­ளி­க­ளின் நிலமை மிக­வும் கவ­லைக்­கு­ரி­ய­தா­கவே இருக்­கின்­றது. தமது வாழ்­வி­யல் போக்கை மாற்ற வலு இல்­லா­மை­யால், அவர்­கள் தமது வாழ்­நா­ளோடு போரா­டும் நிலமை பரி­தா­பத்­துக்கு உரி­ய­தாக ஆகி இருக்­கின்­றது.

சமூ­கத்­தில் இப்­போது தலை­ விரித்­தா­டும் சமூக ஊட­கங்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­வர்­கள், தமக்­கான கருத்­துச் சுதந்­தி­ரம் மூலம் ஓர­ளவு தமது பிரச்­சினை ­களை (பொரு­ளா­தா­ரம், மருத்­து­வம்) நண்­பர்­க­ளோடு பகிர்ந்து தமது வாழ்வை நகர்த்­து­கின்­ற­னர். ஆனால், இப்­ப­டி­யான சமூ­கத் தொடர்பு இல்­லாத முன்­னாள் புலி உறுப்­பி­னர்­க­ளின், அது­வும் உடல்­கா­யங்­க­ளு­டன் அங்­க­வீன­மாக இருப்­ப­வர்­க­ளின் நிலமை சொல்­லி­ மா­ளாதது.

இரு­த­லைக் கொள்ளி எறும்­பின் நிலை­யில்
ஒரு சில முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள்

குறிப்­பிட்ட ஒரு­சி­ல­ரின் நிலமை சொல்­லொ­ணாத் துய­ர­மா­னது. சமூ­கத்­துக்­குள் தாம் ஒரு முன்­னாள் புலி உறுப்­பி­னர் என்று சொல்­வ­தால் ஏற்­ப­டும் நன்­மை­கள், தீமை­கள் தொடர்­பில் அவர்­கள் இரு­த­லைக்­கொள்ளி எறும்­பா­கவே திண்­டா­டு­கின்­ற­னர்.

அரச, இரா­ணுவ பார்வை அவர்­க­ளில் இருந்து வில­கா­மல் கழு­குக்­கண்­கள் அவர்­களை மொய்த்­துப் பிடித்த வண்­ணம் உள்­ள­தும் உண்­மை­யா­னதே.
இந்த முன்­னாள் புலி உறுப்­பி­னர்­க­ளின் வாழ்­வி­யலை மேம்­ப­டுத்த பலர் முன்­வ­ரு­கின்றபோதும், அவர்­க­ளுக்­கான உள­வ­ளத்தைத் தர எவ­ரும் முன்­வ­ராமை கவ­லைக்­கு­ரி­யது. ஒரு­ம­னி­த­னால் மன ஆரோக்­கி­யத்தைப் பேண­மு­டி­யா­மல் போனால், உடல் நலி­வு­று­வது இயற்­கையே. நலி­வு­றும் உட­லையே தூக்கி நிறுத்­தும் வல்­லமை மன ஆற்­றுப்­ப­டுத்­த­லுக்­கும், மனத் தைரி­யத்­துக்­கும் உண்டு. இதைப் பொறுப்­பா­ன­வர்­கள் நன்­கு­ணர்ந்­து­கொள்ள வேண்­டும்.

பொறுப்­பு­டன் அவர்­க­ளது மனதை
அண்­மிக்­கும் செயற்­பா­டு­களே
தற்­போது அவ­ச।ி­ய­மா­னவை

வீர­மு­ழக்­கங்­க­ளும், வீர வணக்­கங்­க­ளும் அவர்­க­ளின் மன உணர்­வு­க­ளைத் தற்­போது பிரித்­துப்­போ­டும் நிலை­யில் இல்லை. கார­ணம், அவர்­கள் நோயி­னா­லும், விழுப்­புண்­ணா­ லும், வறு­மை­யா­லும் நலி­வுற்று இருக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு ஆக்­ரோ­ச­மான பேச்­சுக்­க­ளையோ, வீர வச­னங்­க­ளையோ கேட்­கும் மன­நிலை இல்லை. எனவே பொறுப்­பு­டன் அவர்­க­ளின் மனதை அண்­மிக்­கும் செயற்­பா­டு­களே தற்­போது தேவை­யா­னவை. தாம் அனா­த­ர­வாக்­கப்­பட்­டுள்­ளோம் என்ற உள்­ளு­ணர்வு அவர்­க­ளி­டம் இருப்­பதை நான் நேர­டி­யாக கண்டு, கேட்டு உணர்ந்­துள்­ளேன். ஆகை­யி­னால் அவர்­க­ளின் மன­நி­லை­யில், மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி உடல்­நி­லை­யைத் தேற்­றி­ட­நாம் முன்­வர வேண்­டும். ஒரு­சி­ல­ருக்­கா­னது என்­றில்­லா­மல், ஒட்­டு­மொத்­த­மாக அவர்­க­ளது உள நல­னில் அக்­கறை காட்ட வேண்­டிய தலை­யாய கடமை இன்­றைய எமது தமிழ்ச் சமூ­கத்­துக்கு உண்டு.

அண்­மை­யில் ஒரு முன்­னாள் புலி உறுப்­பி­னர் (திலீ­பன் என்ற பெயர் கொண்­ட­வர்) படுத்த படுக்­கை­யாக தன் உடல் உபா­தை­யோடு போரா­டும் விட­யம் வௌிக்­கொ­ண­ரப்­பட்­டது. யுத்­தம் முடி­வ­டைந்­தும் 9வரு­டங்­க­ளின் பின் இப்­படி ஒரு உயிர் வாழ்­வோடு போரா­டிக் கொண்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டமை துர­திஷ்­ட­வ­ச­மான விட­யமே. காலம் முந்­திய நிலை­யில் அவர் கண்­ட­றி­யப்­பட்டு இருந்­தால், அவ­ரது வாழ்க்கை நில­மையை கண்­டிப்­பாக மாற்றி அமைத்­தி­ருக்க முடி­யும். எனவே அவர்­கள் தொடர்­பில் பாரா­மு­க­மாக சமூ­கம் இருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. குறிப்­பிட்ட பல வரு­டங்­கள் அவர்­கள் உண­வுக்­கும் உடைக்­கும் தமது தலை­மை­யில் தங்கி வாழ்ந்­த­வர்­கள். சுய­மான பொரு­ளா­தா­ரம், வாழ்­வி­யல் என்­பது போராட்­டத்­துக்கு அடுத்த மாறு­பட்ட படி­நிலை. இதனை அவர்­கள் யாதார்த்­த­மாக உணர்­வது மிக­வும் கடி­ன­மா­னது. முற்­றி­லும் மாறு­பட்ட ஒரு வாழ்க்­கை­யைச் சந்­தித்­த­வர்­கள் சமூ­கத்­தின் தற்­போ­தைய மாற்­றத்­துள் நுழை­வது சவா­லான விட­யமே.

சமூக ஆர்­வ­லர்­க­ளும்
பொறுப்­புள்­ள­வர்­க­ளும்
முன்­னாள் போரா­ளி­கள் விட­யத்­தில்
கரி­சனை கொள்­ள­வேண்­டும்

இதனை சமூக ஆர்­வ­லர்­க­ளும் பொறுப்­புள்­ள­வர்­க­ளும் நன்கு உணர்ந்து அவர்­கள் தொடர்­பில் கண்­டிப்­பாக கரி।­­ச­னை­கொள்ள வேண்­டும். அவர்­கள் வாழ்­வி­யலை நுணுக்­க­மாக வழிப்­ப­டுத்த உறு­துணை புரி­ய­ வேண்­டும். ‘‘சமூ­கத்­துள் இணைப்பு’’ என்ற சொற்­ப­தமே, அவர்­களை பிரி­வி­னைப்­ப­டுத்­திய பின்பே சமூ­கத்­துக்­குள் நகர்த்தி இருக்­கின்­றது. இந்த நில­மையை மாற்றி அவர்­க­ளின் உள, உடல் நல­னில் கரி­சனை கொள்­ளல் மனித பொது நீதி­யாக ஆகி­யுள்­ளது.

தமது நிலமை தொடர்­பில் பலர் வௌிப்­ப­டை­யாக பேச­மு­டி­யா­மல் உள்­ள­மை­யும், இங்கு நோக்க வேண்­டிய விட­யம். அர­சி­யல் நகர்வு, சுதந்­தி­ரம் என்ற பக்­கம் பார்க்­கா­மல், சக சமூ­க­மாக அவர்­களை நோக்­கும்­போது, தனித்து அவர்­கள் எதிர்­கொள்­ளும் சவால்­கள் விசித்­தி­ர­மாக உள்­ளன. அவை, சமூக நிலை­யில் தாக்­கம் செலுத்­து­வதை அவர்­கள் உண­ரா­ம­லும் இல்லை. உதவி, வாழ்வு என்று அவர்­கள் ஏமாற்­றப்­பட்ட கதை­க­ளும் இல்­லா­மல் இல்லை. சமூ­கப் பொறுப்­பு­ணர்வு ஒன்று கண்­டிப்­பாக இவர்­கள் தொடர்­பில் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­தல் தற்­போது இன்­றி­ய­மை­யா­த­தாக ஆகி­யுள்­ளது. – ப்ரியமதா பயஸ் –

Sharing is caring!