ஒப்பீட்டளவில் இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் குறைவு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொது வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மழையுடனான வானிலையால் டெங்கு நோய் மீண்டும் பரவும் அபாயம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் இன்று முதல் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை தெரிவுசெய்யப்பட்ட பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!