ஒரு கருத்தை வைத்து மகாநாயக்கர்களை அரசாங்கம் அவமதிக்கின்றது

நாட்டில் இன்று பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ள போதும், மகாநாயக்க தேரர் ஒருவரின் கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் அரசாங்கம் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் தேரர் ஒருவர் கூறிய கருத்தை விளங்கிக் கொள்ள முடியாத சிலர், இன்று மகா சங்கத்தினரையும் அவமதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற கருத்துக்களுக்கு இந்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். நாட்டில் இன்று பிரச்சினைகள் நிறைந்துள்ள நிலையில், தேரரின் கருத்துதான் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!