ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு பணிப்புரை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவினக் குழுவினால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 5,200 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் பயிரிடத்திட்டமிட்டிருந்தது.

இருப்பினும், வரட்சியான காலநிலை காரணமாக 1,500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மட்டுமே பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், பெரிய வெங்காயச் செய்கை 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் செய்தி வௌியிட்டுள்ளது.

Sharing is caring!