ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்கத்துடன் நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்கத்துடன், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 8 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 226 என்ற விமானத்தில் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபர் எடுத்து வந்த பயணப் பையில் 02 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!