ஒரு தொகை கடல் அட்டைகளை தனுஸ்கோடி கரையோர பாதுகாப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.
இலங்கைக்கு கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடல் அட்டைகளை தனுஸ்கோடி கரையோர பாதுகாப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.
தனுஸ்கோடி வழியாக இலங்கைக்கு ஒரு தொகை கடல் அட்டைகள் கடத்தப்படவிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 சாக்கு மூட்டைகளில் 300 கிலோ எடை கொண்ட உயிருள்ள கடல் அட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளின் பெறுமதி சுமார் 60 இலட்சம் இந்திய ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளதுடன், கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S